திருப்பத்தூரில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

திருப்பத்தூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் பூ மார்க்கெட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-10-23 06:45 GMT

ஆயுத பூஜை

ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை), கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகள், கடைகள், வாகனங்களை சுத்தம் செய்து மா இலை, வாழை தோரணங்கள் கட்டி வழிபடுவார்கள். இதற்கு தேவையான சந்தனம், குங்குமம், பூ, பொரி, கொண்டை கடலை, வெள்ளை பூசணி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்குவதற்கு நேற்று மாலை பஜார் பகுதியில் அதிக அளவு பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூ விலை உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று திருப்பத்தூர் பூ மார்க்கெட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.800 முதல் ரூ.1,000 வரையும், மல்லிகை ரூ.400 முதல் ரூ.540 வரையும், முல்லை ரூ.460 முதல் ரூ.500 வரையும், காக்கட்டான் ரூ.260 முதல் ரூ.280 வரையும், ரோஜா ரூ.160 முதல் ரூ.200 வரையும், சம்பங்கி ரூ.200-க்கும், சாமந்தி ரூ.40 முதல் ரூ.140 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்