தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-06-11 15:50 GMT

திருக்கடையூர்:-

திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மதகு கட்டும் பணி

திருக்கடையூர் - கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தனியார் மினிபஸ், கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் நட்சத்திர மாலை, காடுவெட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி மதகு கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் நட்சத்திர மாலை, காடுவெட்டி, ரவணன் கோட்டகம், கிள்ளியூர் வழியாக செம்பனார்கோவில் செல்பவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தரைப்பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்