வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுவதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுவதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-12 21:57 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியில் சித்தர் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் நாடார் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வசித்து வரும் நாடார் தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் வெளியேறும் அசுத்தமான தண்ணீர் பலரது வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகவும், வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்து விட்டதாகவும் மற்றும் விஷ ஜந்துக்கள் நுழைந்ததாகவும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சாக்கடை கால்வாய் நீர் ஊருக்குள் வராதபடி போலீசார், அதிகாரிகளுடன் சேர்ந்து துரித நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்