குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோட்டூரில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-08 20:30 GMT
பொள்ளாச்சி


கோட்டூரில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சாலை மறியல்


பொள்ளாச்சி அருகே கோட்டூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஆழியாற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இது தொடர்பாக புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று கோட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதை அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் பேரூராட்சி நிர்வாகம் தரப்பிலும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


குடிநீர் வினியோகம்


அப்போது பொதுமக்கள் தரப்பில், 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிப்படு கின்றனர். இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், மொசவம்பாறை யில் குடிநீர் தொட்டி கட்டி பல ஆண்டு ஆகிறது. அதில் தற் போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

எனவே குடிநீர் வினியோகம் ெதாடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே லாரிகள், டிராக்டர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் மட்டும் காலதாமதமாக குடிநீர் வழங்கப்படு கிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்