பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஜமுனாமரத்தூரில் அதிகாலை நேரங்களில் பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-08-07 18:57 GMT

ஜமுனாமரத்தூரில் அதிகாலை நேரங்களில் பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

ஜமுனாமரத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு முதலாவது பஸ் அதிகாலை 4.30 மணிக்கு போளூர் வழியாக செல்கிறது. அதன் பின்னர் 2-வது பஸ் காலை 8.20 மணிக்கு புறப்படுகிறது. இதற்கிடையில் ஜமுனாமரத்தூரில் இருந்து காலை 6.45மணிக்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பஸ்சும் அவ்வபோது பழுதாகி நின்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அரசு அலுவலர்கள், போளூர் மார்க்கெட்டிற்கு செல்லும் விவசாயிகள் சரியான நேரத்திற்கு தங்களின் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே இதற்கு மாற்றாக பஸ் வசதி செய்து தரக் கோரி அத்திமூர் சோதனை சாவடி அருகே தும்பகாடு செல்லும் வழியில் உள்ள பாலத்தின் அருகில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள், போலீசார் யாரும் வராததால் அவர்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்று மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்