100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பசலிக்குட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அருகே பசலிக்குட்டை ஊராட்சி பகுதியில் நேற்று 100 நாள் வேலை கேட்டு சென்றவர்களுக்கு பணித்தள பொறுப்பாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (அதாவது இன்று) வேலை தருவதாக கூறியதால் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த மறியலால் திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.