மங்கலம்பேட்டை அருகேரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

மங்கலம்பேட்டை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2023-03-28 18:45 GMT


விருத்தாசலம், 

மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனூரில் முடக்கு பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதற்காக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால், விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, வாகனம் மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கூறி, நேற்று திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்