ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-07-28 19:55 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சாரம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சரியாக வேலை வழங்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் சரியாக வேலை வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்