பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கடையம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-03 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே முதலியார்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், இரவு நேரத்தில் போலீசார் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் முதலியார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இரவு நேரத்தில் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்ைத கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கோதர் மைதீன், ஜமாத் செயலாளர் நவாஸ், ஜமாத் பிரதிநிதிகள் அலி, ஷேக் முகம்மது, ராஜா, ஷேக், ஜாபர், மைதீன், பாசூல் அசரப், பீர் முகம்மது, மாலிக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்