ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புங்கம்பட்டு ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் ஊாட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புங்கம்பட்டு ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் ஊாட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருப்பத்தூர் ஒன்றியம் ஜவ்வாதுமலையில் உள்ள புங்கம்பட்டு ஊராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனக்கூறி 3-வது வார்டு உறுப்பினர் எஸ்.கே.குப்பன், தலைமையில் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகைமிட்டனர். பின்னர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் இளவரசியிடம் மனு அளித்தனர்.
அதில் புங்கம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்பதில்லை, ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் தெரு விளக்குகள், தண்ணீர், சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனை செய்து கொடுக்கக் கூறி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரூ.20 ஆயிரம் கேட்கிறார்கள்
மேலும் ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கிராமசபை கூட்டங்களில் சமர்ப்பிக்க வில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் பணம் வழங்கவில்லை, பிரதம மந்திரி வீடுகளுக்கு இதுவரை 140 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயனாளுக்கு அதற்கான ஆணை வழங்க ரூ.20 ஆயிரம் வரை கேட்கிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதன்பேரில் உரிய நடவடிக்கை ஊராட்சி உதவி இயக்குனர் எடுக்க உத்தரவிட்டார்.