பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-08-28 17:47 GMT

பேரணாம்பட்டு ஒன்றியம் செர்லப்பல்லி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் 70 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1996-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கான இடத்தை அளவீடு செய்து தராததால் பயனாளிகள் வீடு கட்டாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

ஜமாபந்தி நிகழ்ச்சி, மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆகியவற்றில பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் நெடுமாறன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டு மனை பட்டாக்கள் விவரத்தை மனுக்களுடன் கொடுக்குமாறும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்