ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-12 10:40 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கிளை ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் நாட்ராயன் தலைமை தாங்கி பேசினார்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ செலவு தொகையை ஆறு ஆண்டுகள் ஆகியும் வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டக்கிளை நிர்வாகிகள் லாரன்ஸ் நிர்மல்ராஜ், சின்னசாமி, சுந்தர்ராஜ், பழனிசாமி, காளிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் கோரிக்கை குறித்து பேசினார். நிர்வாகிகள் சீரங்கராயன், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்