ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை வருகிற 27-ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-24 19:34 GMT

மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை வருகிற 27-ந்தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவி தொகையை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர்.

தற்போது அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

27-ந்தேதிக்குள்...

எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆகிய ஆவணங்களில் அசல் மற்றும் நகலையும், மாற்றுத்திறனாளி புகைப்படம், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வருகிற 27-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்