ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-08-16 19:00 GMT

தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மயிலாடுதுறையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், வட்டத் தலைவர்கள் கலியபெருமாள், சந்திரபோஸ், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இதில் சங்கத்தின் மாநில செயலாளர் மகாலிங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில பொறுப்பாளர் சிவராமன், மாநகராட்சி, நகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர் சங்க செயலாளர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட மாத சந்தா உயர்த்தியதை உடனே கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்