விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், இடைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்துதர வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி உயர்பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் பளிங்கன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஓய்வூதியர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.