ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-01 15:47 GMT


திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கேசவன், அமல்ராஜ், ஜேம்ஸ் கஸ்பர்ராஜா, ஜான்போர்ஜியா, நல்லக்கண்ணு மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். 80 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி., தபால் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்