கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்போலீசாருக்கு சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக கூட்டரங்கில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஜய் கார்த்திக்ராஜா, ஜவகர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பேசுகையில், மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை எவ்வாறு குறைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும், கோப்புக்கு எடுத்துக்கொள்ளாத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்து அதனை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார். போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், பழனி, மகேஷ், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.