ஸ்ரீமுஷ்ணத்தில்பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்பொது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
ஸ்ரீமுஷ்ணத்தில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சுகாதாரத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஸ்ரீமுஷ்ணம் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், ராஜா, தினேஷ், சித்தார்த்தன், கோபாலக்கிருஷ்ணன், வீரமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் ஸ்ரீமுஷ்ணம் தெற்கு ரத வீதி, கடைவீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் வணிக வளாகங்களில் 'இங்கு புகை பிடிக்க தடை', '18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது' ஆகிய விழிப்புணர்வு பதாகைகள் முறையாக வைக்காத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.