பந்தலூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்

பந்தலூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்

Update: 2023-06-04 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே கையுன்னி, எருமாடு, தாளூர் சோதனைசாவடி உப்பட்டி உள்பட பல பகுதிகளில் பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் விஜயன், லட்சுமிசங்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், செந்தில்குமார், அசோக்குமார், கர்ணன் மற்றும் வருவாய்துறையினர் கடைகளில் பிளாஸ்டிக்குகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனையிட்டனர். அப்போது ஒரு கடையில் பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தாளூர் சோதனைசாவடியையும் தாசில்தார் நடேசன் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்