அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்
மூலைக்கரைப்பட்டியில் அதிக பாரம் ஏற்றிய லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இட்டமொழி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சரகம் பருத்திப்பாடு வழியாக நெல்லைக்கு டிப்பர் லாரிகளில் சரள் மண் ஏற்றப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதனை மூலைக்கரைப்பட்டி போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றப்பட்டு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.