காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு அபராதம்
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி கோட்டமலை வனப்பகுதியில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் ராஜூ, சன்னாசி, தாசன், ஆசீர்வாதம் மற்றும் குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு நபர் காட்டுப்பன்றியை இழுத்துக்கொண்டு செல்வதை பார்த்து அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 47) என்பதும், கொய்யா பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை இறைச்சிக்காக வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வனத்துறையினர் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.