ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்

ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-08-22 19:35 GMT

ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆட்டோ உரிமம்

விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் அருகில் உள்ள எரிச்சநத்தத்தில் 50 பேர் பயணிகள் ஆட்டோ உரிமம் வாங்கி தொழில் செய்து வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது.

எங்கள் பகுதியில் உள்ளோர் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு விருதுநகருக்கு சென்று வர வேண்டி உள்ளது. அப்போது ஆட்டோவில் சென்றால் விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கிறது.

இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு

வெம்பக்கோட்டை தாலுகா அப்பயநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள மேலாண்மறைநாடு கிராம பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள செல்லியாரம்மன் கோவில் திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி உள்ளனர். மேலதொட்டியங்குளம் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்