புகையிலை விற்ற 8 கடைகளுக்கு அபராதம்

புகையிலை விற்ற 8 கடைகளுக்கு அபராதம்

Update: 2023-06-24 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பனப்பட்டி, காவிலிபாளையம் ஆகிய பகுதியில் பள்ளி, கோவில் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரி முரளி கிருஷ்ணன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், அழகுராஜ், செல்வம், இன்பரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலை விற்பனை செய்ததும், கடைகள் முன்பு புகைப்பிடிக்க அனுமதி அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 8 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்