அரசு பஸ்களில் ஓசியில் பயணம் செய்த 37 பேருக்கு அபராதம்

அரசு பஸ்களில் ஓசியில் பயணம் செய்த 37 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-07-23 20:03 GMT

சேலம் போக்குவரத்துக்கழகத்தில் 40 குழுக்கள் அமைத்து அரசு பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்யும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சேலத்தில் குகை, பிரபாத், அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் சென்ற அரசு டவுன் பஸ்களில் நேற்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது பஸ்களில் சென்ற பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது, டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 37 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்