12 மணல் லாரிகளுக்கு அபராதம்
12 மணல் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே நேற்று கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மணல் ஏற்றி வந்த லாரிகளில் தார்ப்பாய் போடாமல் வந்தது தெரியவந்தது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாதது, ஓட்டுனர் சீருடை அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் தொடர்பாக 12 மணல் லாரிகளுக்கு ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.