சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம்

சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-03 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை வாகனம் மூலம் நகரில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மாடுகள், விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பறக்கும் படையினர் நேற்று பி.கே.எஸ்.ஏ. ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள ஒரு மோட்டார் சைக்கிள் வாகன பழுது பார்க்கும் கடையின் முன்பு ஏராளமான பழைய மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திருத்தங்கல் ரோட்டில் உள்ள ஒரு மெக்கானிக் கடையின் உரிமையாளருக்கும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நகரில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் உடனே பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்