அனுமதியின்றி கிளி வளர்த்த சமையல்காரருக்கு அபராதம்

மோகனூரில் அனுமதியின்றி கிளி வளர்த்த சமையல்காரருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2023-03-09 18:36 GMT

மோகனூர்

மோகனூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 54). அங்குள்ள கோவிலில் சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் பச்சைகிளி ஒன்று இறக்கையை வெட்டி பறக்க முடியாதவாறு கூண்டில் அடைத்து வைத்து வளர்த்து வந்துள்ளார். இது குறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை வனவர் திலகவதி இறக்கையை அகற்றப்பட்டவாறு இருந்த பச்சைகிளியை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி கிளி வளர்த்த மணிக்கு ரூ.2,000 அபராதம் விதித்தார். தொடர்ந்து அனுமதியின்றி வன உயிரினங்களை வளர்க்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்