உரிமையாளர்களுக்கு அபராதம்

உரிமையாளர்களுக்கு அபராதம்

Update: 2022-06-22 17:55 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி நகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதனை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் அறிவித்தார். இந்தநிலையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று 2-ம் கட்டமாக 55 மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைத்து வைத்தனர். பின்னர் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் ஒப்படைக்கப்பட்டது. மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி மண்டல இயக்குனர் பார்த்திபன், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி துணைத்தலைவர் கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்