மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-15 17:46 GMT

 கரூர் மாநகராட்சி சார்பில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மாநகராட்சி துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குப்பைகள் அகற்றுதல், சாக்கடை தூர்வாருதல், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்