பியர்ல்ஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-23 14:37 GMT

தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி எஸ்.டி.ஆர். ரெஸ்ட்டாரண்டில் நடைபெற்றது. விழாவில், புதிய தலைவர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் மற்றும் செயலாளர் ரத்னாதர்மராஜ், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோருக்கு அரிமா முன்னாள் ஆளுநர் சுரேந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் துணைத்தலைவர் தெய்வநாயகம் புதிய தலைவரிடம் சங்க பொறுப்புகளை ஒப்படைத்தார்.

மேலும் முன்னாள் ஆளுநர் பிரகாஷ் புதிய உறுப்பினர்கள் 28 பேருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரிமா ஆளுநரின் பசிக்கு உணவு திட்டத்தின் மூலம் 100 ஏழைகளுக்கு உணவளித்தார். நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர் ஜெயக்குமார், வட்டார பொறுப்பாளர் ரொசாரிலூயிஸ் பர்னான்டோ, சண்முகவெங்கடேசன், முன்னாள் தலைவர் சீனிவாசன், வட்டார தலைவர் ஆலயமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் முத்தையாபுரம், முள்ளக்காடு, சாயர்புரம் மற்றும் தூத்துக்குடி மாநகரில் உள்ள அரிமா சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழில்அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை டி.ஏ.தெய்வாநாயகம், அபிராமி சந்திரசேகர், பால்ராஜ் மற்றும் தூத்துக்குடி பியர்ல்ஸ் அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்