வாகனம் மோதி இறந்த மயில்
வேடசந்தூர் அருகே வாகனம் மோதி பெண் மயில் இறந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் பெண் மயில் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இறந்த மயிலை மீட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்களிடம் கொடுத்தனர். அவர்கள் மயிலின் உடலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.