மின்சார கம்பியில் அடிபட்டு மயில் சாவு
மின்சார கம்பியில் அடிபட்டு மயில் செத்தது.
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பஸ் நிறுத்தம் அருகில் உயர் மின்னழுத்த கம்பியில் அடிபட்டு ஆண் மயில் செத்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டிவிடுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மயிலுக்கு உரிய மரியாதை ெசலுத்தி அப்பகுதியில் புதைத்தனர்.