திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு மயில் இறந்தது.

Update: 2023-06-20 21:00 GMT

சென்னையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் என்ஜின் பகுதியில் ஒரு மயில் இறந்து கிடப்பதை ரெயில்வே போலீசார் பார்த்தனர்.

உடனே என்ஜினில் சிக்கியிருந்த மயிலின் உடலை மீட்ட போலீசார், அதனை திண்டுக்கல் வனக்காவலர் அரவிந்தனிடம் ஒப்படைத்தனர். இரைக்காக தண்டவாள பகுதியை மயில் கடக்க முயன்ற போது, ரெயிலில் அடிபட்டு மயில் இறந்திருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்