ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

முத்துப்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு மயில் சாவு

Update: 2023-07-24 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு ெரயில் தண்டவாளம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஒரு ஆண் மயில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியாக காரைக்குடியிலிருந்து திருவாரூர் நோக்கி சென்ற பாசஞ்சர் ெரயிலில் அந்த மயில் அடிபட்டு இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயிலை மீட்டு முத்துப்பேட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். பின்னர் உயிரிழந்த மயிலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்