கயத்தாறு அருகே புதிய சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்துவது தொடர்பாக சமாதன பேச்சுவார்த்தை

கயத்தாறு அருகே புதிய சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே சமாதன பேச்சுவார்த்தை நடந்தது.

Update: 2022-06-05 11:54 GMT

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா தெற்குகழுகுமலை பஞ்சாயத்தை சேர்ந்த துலுக்கர்பட்டியில் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போது இருதரப்பினரும் சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், தற்போது நடைபெற்று வரும்கோவில் கொடை விழா முடிந்த பின்பு, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும் வரை சமுதாய கூடத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என சமாதானக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மண்டல துணை தாசில்தார் திரவியம், வருவாய் ஆய்வாளர் சுஜிதா, கிராம நிர்வாக அலுவலர் கல்யாணகுமார், கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், மற்றும் இருசமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்