ஜெயலலிதா நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அமைதி ஊர்வலம்

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது

Update: 2022-12-05 20:10 GMT


மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநாகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு தலைமையில் ஜான்சி ராணி பூங்காவில் இருந்து, மலர்களால் அலங்கரித்த ஜெயலலிதா உருவப்பட ஊர்தி, முன்னாள் செல்ல அதனை பின் தொடர்ந்து, கட்சியின் மகளிர் அணி, இளைஞரணி, வக்கீல் அணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அமைதி ஊர்வலமாக நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வடக்கு மாசி வீதி சந்திப்பு வரை வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவு மேடை முன்பு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் இரண்டு நிமிட மவுன அஞ்சலி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக ஜெயலலிதா வழியை பின்பற்றி அவரது ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்