பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு:முதியவரை தாக்கியவர் கைது
போடியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
போடி ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குருசாமி (வயது 60). போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (70). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனகராஜ் நேற்று முன்தினம் மாலை குருசாமி வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ், தகாத வார்த்தைகளால் பேசியதுடன் குருசாமியை தாக்கினார். இதுகுறித்து குருசாமி போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.