தேவி முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
தச்சமொழி தேவி முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி தேவி முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு முத்துமாரியம்மன், முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.