மங்கைமடம் வீரநரசிம்மர் கோவிலில் பவித்ரோற்சவம்

மங்கைமடம் வீரநரசிம்மர் கோவிலில் பவித்ரோற்சவம் நடந்தது.

Update: 2022-11-25 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் வீர நரசிம்மர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பவித்ரோற்சவம் நடந்தது. இதனையொட்டி நேற்று சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நரசிம்மருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்