கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.
வடுவூர்:
மன்னார்குடி அருகே உள்ள விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர், பெருமாளுக்கு வண்ண பட்டு நூல்களால் செய்யப்பட்ட பவித்திரமாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஸ்ரீரங்கம் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஆசிரம ஜீயர், வடுவூர் வேத பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகமாந்த மகா தேசிகன் சாமியின் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலும் ஜீயர் மற்றும் தீட்சதர்கள் கலந்து கொண்டனர்.