நடைபாதை அமைத்து தர நடவடிக்கை

சீர்காழி அருகே தெற்கு இருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியக்குழு தலைவர் உறுதி

Update: 2023-02-11 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே எடக்குடி வடபாதி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு இருப்பு அரசினர் தொடக்கப்பள்ளியில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் நடைபாதை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். விரைந்து நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். ஆய்வின் போது ஒன்றியக்குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள், ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க் மற்றும் இருக்கை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்