மாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை திறப்பு

மாவடியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் சாலை திறந்து வைக்கப்பட்டது.

Update: 2023-06-05 19:29 GMT

இட்டமொழி:

களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிப்புதூர் ஊராட்சி மாவடியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எஸ்.ஜார்ஜ்கோசல், மலையடிப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி அழகியநம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

களக்காடு நகராட்சி 8-வது வார்டு மற்றும் 20-வது வார்டு பகுதியில் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்றது. அதனை அறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளிடம், கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அப்போது காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்