வாறுகால் அமைக்கும் பணி

வள்ளியூர் யூனியனில் ரூ.30.96 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி நடந்தது

Update: 2022-07-07 20:49 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் வேப்பிலான்குளம் பஞ்சாயத்து வேப்பிலான்குளம், வடக்கு கும்பிளம்பாடு, மருதப்பபுரம், கால்கரை ஆகிய கிராமங்களில் ரூ.30.96 லட்சத்தில் புதிய வாறுகால் அமைக்கும் பணிக்கு தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் நடராஜன், கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் தாய்செல்வி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா புதிய வாறுகால் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து செயலாளா் சங்கர், வார்டு உறுப்பினர்கள் உள்ளமுடையார், முருகானந்தம், லட்சுமி, வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் இளங்ேகாவேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்