பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பேட்டை பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-17 19:55 GMT

பேட்டை:

பேட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்ய பூஜை, கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம், சிவசூரிய பூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை, யாகசாலை பூஜைகள், யாத்ரா தானம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.30 மணி அளவில் யாகசாலை பூஜையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பத்திரகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்