அய்யனார் ேகாவில் புரவி எடுப்பு விழா
அய்யனார் ேகாவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பள்ளத்து அய்யனார், நல்லாண்டி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையடுத்து வேந்தன்பட்டியில் மண்ணினால் செய்யப்பட்ட குதிரைகள் மற்றும் காளைகள் சிலைகளை பக்தர்கள் தூக்கி கொண்டு ஊர்வலமாக பள்ளத்து அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் வேந்தன்பட்டிக்கு வந்து அதே போன்று மீண்டும் குதிரை சிலைகளை பக்தர்கள் எடுத்து கொண்டு ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள நல்லாண்டி அய்யனார் கோவிலில் கொண்டு வைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.