புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-23 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியை தலைகிராமமாக கொண்டு கோட்டை வேங்கைபட்டி, சூரம்பட்டி, பிராண்டிபட்டி ஆகிய கிராமங்கள் இணைந்து கண்ணமங்கலகரையில் அமைந்துள்ள கரமால்கொண்ட அய்யனார் (முப்பலி கருப்பர்) கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் புரவி எடுப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா வைகாசி மாதத்தில் நடைபெறுவதால் முன்னதாகவே சித்திரை மாதத்தில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் நோய் நொடி இன்றி வாழவும் கரம்பால் கொண்ட அய்யனாருக்கு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. முன்னதாக சிங்கம்புணரி வேளார் வம்சாவளி குயவர்களிடம் ஒரு மாதத்திற்கு முன்பு பிடி மண் கொடுக்கப்பட்டு 3 கிராமத்திற்கும் தலா ஒவ்வொரு அரண்மனை புரவியும், 3 நேர்த்திக்கடன் புரவியும் என 6 புரவிகள் சிங்கம்புணரி புரவி பெட்டலில் தயார் செய்யப்பட்டது.

நேற்று சாமியாடிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புரவி எடுத்து வந்தனர். பின்னர் புரவிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு சாமி அழைத்து புரவி தூக்கி செல்லப்பட்டது. கோட்டை வேங்கைபட்டி மந்தைக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் புரவிகள் கரமால் கொண்ட அய்யனாருக்கு செலுத்தப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்