சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு ரோந்து வாகனம்
சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு ரோந்து வாகனம்
பந்தலூர்
பந்தலூர் அருகே சேரம்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இரும்புபாலம், சேரம்பாடி, சோலாடி உள்பட பல பகுதிகளில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்வும் ரோந்து வாகனம் அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனம் மூலம் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவுப்படி தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் சேரம்பாடி போலீஸ் நிலையத்திற்கு ரோந்து வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் சேரம்பாடி இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிக்கந்தர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். போலீஸ் ரோந்து வாகனம் வழங்கப்பட்டு உள்ளதால் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.