மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகளை திறக்க நோயாளிகள்கோரிக்கை
மருத்துவமனையில் பூட்டப்பட்ட கழிவறைகளை திறக்க நோயாளிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் அருகில் ஆண், பெண்களுக்கான கழிவறைகள் உள்ளன. அந்தக் கழிவறைகள் தற்போது பூட்டியே கிடக்கின்றன. இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிப்படுகின்றனர். பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறந்து விட வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.