பயிற்சி டாக்டர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல்-பணிகளை புறக்கணித்து சக டாக்டர்கள் போராட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால், பணிகளை புறக்கணித்து சக டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-07 20:44 GMT

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால், பணிகளை புறக்கணித்து சக டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சி டாக்டர் மீது தாக்குதல்

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த முதியவர் குருசாமி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று இரவில் திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கிருந்த பயிற்சி டாக்டர் நித்திஷ் ஆர்தரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம், மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், உறைவிட மருத்துவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிைடயே பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக சிலரை பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் டாக்டர்கள் நடத்திய திடீர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்