பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம்
எட்டயபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள எத்திலப்பநாயக்கன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி கொடை விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக சுந்தர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பால்குடம் ஊர்வலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.